January 21, 2017
ஜல்லிக்கட்டு: அவசர சட்டம் வேண்டாம்- நிரந்தர சட்டமே தேவை- அலங்காநல்லூர் மக்கள் ஆவேசம்
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் தேவையில்லை; நிரந்தர சட்டம்தான் தேவை என அலங்காநல்லூர் மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திட நிரந்தர சட்டம் தேவையே தவிர அவசர சட்டம் வேண்டாம் என அலங்காநல்லூர் மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு எனும் தமிழர் பண்பாட்டு உரிமையை மீட்க பல லட்சம் இளைஞர்கள், மாணவர்கள் ஒரு வார காலமாக ஒன்று திரண்டு அமைதி அறவழி புரட்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்புரட்சிக்கு அடிபணிந்த தமிழக அரசு தற்போது ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
அதுவும் 70-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்கிறது அவசர சட்டம். ஆனால் இந்த அவசர சட்டத்தை ஏற்கவே முடியாது; எங்களுக்கு தேவை நிரந்தர சட்டம் என்கின்றனர் அலங்காநல்லூர் மக்கள்.
மேலும் ஒவ்வொரு முறையும் ரோட்டுக்கும் கோர்ட்டுக்கும் நாங்கள் செல்ல முடியாது; ஏனெனில் அவசர சட்டம் 6 மாதத்துக்கு மட்டும்தான் செல்லுபடியாகும்; நிரந்தரமாக எந்த தடையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டுவரப்படும் வரை தங்களது போராட்டம் ஓயப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர் அலங்காநல்லூர் மக்கள்.
இதனிடையே மதுரையில் மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் இன்று ஜல்லிக்கட்டு போட்டி சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் விழா குழுவினர் ஒப்புதல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஜல்லிக்கட்டு: அவசர சட்டம் வேண்டாம்- நிரந்தர சட்டமே தேவை- அலங்காநல்லூர் மக்கள் ஆவேசம்
Reviewed by மறத்தமிழன்
on
January 21, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.