Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 17, 2017

தமிழர்களுக்கு பச்சை துரோகம் செய்யும் சில ஊடகங்கள்! ஜல்லிக்கட்டிற்கு எதிராக செய்தி வெளியிடும் கொடுமை



தமிழர்களின் 4 ஆயிரம் ஆண்டு கால பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டை இன்று ஏதேதோ நிறுவனங்களின் பெயரைச் சொல்லி தடை செய்துள்ளனர்.
இதற்கெதிராக தமிழகத்தில் மட்டுமின்றி கடல் கடந்து வாழும் தமிழர்கள் எழுச்சிமிகு  போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்தை சமூக பொறுப்புடன் சில ஊடகங்கள் அணுகி வருகின்றன. மாநில உணர்வை புரிந்து கொண்டு செய்திகளை வெளியிடுகின்றன.
நியூஸ் 7 தொலைக்காட்சி தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலனாக களமிறங்கியுள்ளது. நியூஸ் 18, புதிய தலைமுறை  உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளும் தமிழ் இளைஞர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தங்களது கடமையை ஆற்றி வருகின்றன.
ஆனால் சில முக்கிய செய்தி சேனல்கள் ஜல்லிகட்டு போராட்டங்களை புறக்கணிப்தோடு, அதற்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றன.
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் ஒரு சிறிய உழவு மாட்டை அடக்குகின்றனர். அந்த வீடியோ காட்சியை ஒரு தொலைக்காட்சி திரும்ப திரும்ப ஒளிபரப்பி, “பார்த்தீர்களா இவர்கள் மாட்டை கொடுமைப்படுத்துகின்றனர்” என செய்தி வெளியிட்டுள்ளது.
மாட்டை கொடுமைப்படுத்துவது தவறு தான் என்றாலும், அந்த செய்தியை வெளியிடுவதன் நோக்கம் அந்த மாட்டை காப்பாற்றுவது போல் இல்லை.
தமிழகத்தில் செய்தி சேனல் நடத்திக்கொண்டு, தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகவே எப்படி செய்தி வெளியிட முடிகிறது என்பது தான் கேள்வி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.