Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 14, 2017

ஜல்லிக்கட்டு: வலுக்கும் போராட்டங்கள்; களமிறங்கிய திரை பிரபலங்கள்


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தமிழகம் முழுவதும் இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஏராளமானோர் போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்ததால், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

அதேபோல், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி மதுரை அவனியாபுரத்திலும் பேரணி நடைபெற்றது. அப்போது பீட்டா மற்றும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.  இதில் நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா மற்றும் இயக்குநர்கள் அமீர், கவுதமன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றனர். அப்போது பீட்டாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் என்றுக் கூறி அவரை மன்னிப்பு கேட்க சொன்னர்.மேலும், ஆர்யாவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.  இதையடுத்து ஆர்யா திரும்பி சென்றார். இதன்பிறகு, போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.