Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 21, 2017

அவசர சட்டம் வேண்டாம்..ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் தேவை.. மெரினாவில் இளைஞர்கள் முழக்கம்


ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்திட நிரந்தர சட்டம் தான் தீர்வாகும், எங்களுக்கு அவசர சட்டம் வேண்டாம் என மெரினாவில் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாட்டை பறைசாற்றும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க பல லட்சம் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பட்டவர்களும் ஒரு வார காலமாக அறவழியில் எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் நேற்று அனுமதி வாங்கியதாகவும், தமிழக ஆளுநரிடம் இன்று அனுமதி வாங்கியதாகவும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த அவசர சட்டத்தை ஏற்கமுடியாது எனவும் எங்களுக்கு தேவை நிரந்தர சட்டம் தான் எனவும் போராட்டத்தை தொடர போவதாக மெரினா போராட்டக்குழு அறிவித்துள்ளது. இது கண்துடைப்பு சட்டம். ஒரு நாள் ஜல்லிக்கட்டு நடத்த நாங்கள் கேட்கவில்லை.

எங்கள் கலாச்சாரத்தில் யாரும் கைவைக்க கூடாது என்று தான் கேட்கிறோம். அதனால நிரந்தரச் சட்டம் இயற்றும் வரை களைந்து போகமாட்டோம். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.
மேலும் மாலை நேரம் ஆகிவிட்டதால் செல்போன் டார்ச் லைட் அடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கலந்துகொண்டுள்ளவர்களும் தெரிவித்துள்ளனர். இதனால் அவச சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.