Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 29, 2017

உடனே நாடு திரும்புங்கள்” – கூகுள் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அழைப்பு


”அதிபர் டிரம்பின் உத்தரவால் அமெரிக்காவுக்கு அறிவாளிகளை கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது என்று கூகுள் நிருவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

டிரம்பின் முஸ்லிம்கள் நாடுகள் மீதான தடையைக் கண்டித்துள்ள சுந்தர் பிச்சை, வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள ஊழியர்களை அமெரிக்கா திரும்புமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சூடான், ஏமன், சோமாலியா ஆகிய ஏழு முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் குடியேற கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளார் . மேலும், சிரிய அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய கூடாது என்றும் டிரம்ப் தடை விதித்துள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் பேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜூகர்பெர்க் இதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் கூகுள் நிருவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்தியருமான சுந்தர் பிச்சை டிரம்பின் உத்தரவை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள கூகுள் நிறுவன ஊழியர்களை உடனடியாக அமெரிக்க திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். தடை செய்யப்பட்டுள்ள இந்த ஏழு நாடுகளில் மட்டும் 187 கூகுள் நிறுவன ஊழியர்களின் வேலை பாதிக்கப்படும் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, சுந்தர் பிச்சை கூறியுள்ளதாக வால் ஸ்டிரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில், ”அதிபரின் இந்த உத்தரவால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். இதனால் கூகுள் நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள்.

மேலும்,வெளிநாடுகளில் இருந்து அறிவுசார் பணியாளர்களை கொண்டு வருவதில் தடைகள் ஏற்படும். எங்களது ஊழியர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவால் வலி ஏற்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.