Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 8, 2017

பன்னீருக்கு வச்ச குறி! சசிகலாவை நோக்கி திரும்பியது! தம்பிதுரையின் திருவிளையாடல்!



அ.தி.மு.க.வில், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரைக்கும் இடையே நிகழும் பனிப்போரால் சசிகலா குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா இருந்தவரை, அனைவரும் அடக்கி வாசித்தனர். உளவுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு நிர்வாகிகள் யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வந்தார்.
ஜெயலலிதா, இரண்டு முறை, முதல்வர் பதவியை இழக்க நேர்ந்தபோது, அதில் தன் விசுவாசியான பன்னீர் செல்வத்தை அமர செய்தார். அவர் மீண்டும் முதல்வரானபோது, பன்னீர்செல்வத்திற்கு அமைச்சரவையில், இரண்டாமிடம் கொடுத்தார்.
பன்னீர்செல்வம் இரண்டாம் இடத்தில் இருப்பது சில பேருக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக, கொங்கு மண்டல நிர்வாகிகள், இரண்டாம் இடத்தை பிடிக்க, மறைமுக மாக முயற்சிகள் மேற்கொண்டனர். இதை உணர்ந்த, ஜெ., கட்சியின் கொள்கை பரப்பு செயலரான தம்பி துரையை, டில்லி அரசியலை கவனிக்க அனுப்பினார்.
எனினும், பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதும், அவரை முதல்வர் பதவியில் அமர வைத்ததும், தம்பிதுரைக்கு பிடிக்கவில்லை. சட்டசபை தேர்தலில், எதிர்ப்பையும் மீறி, பன்னீர் செல்வத்திற்கு, ஜெ., சீட் வழங்கினார். ஆட்சி அமைத்ததும், அவரை நிதி அமைச்சராக்கினார். மீண்டும், பன்னீர்செல்வம் கை ஓங்கத் துவங்கியது.
ஜெ.,விடம் செல்வாக்குடன் இருந்தது போல், சசியிடமும் பன்னீர்செல்வம் செல்வாக்கு பெற்று விடக் கூடாது என, தம்பிதுரை உட்பட சிலர் காய் நகர்த்தினர்.
எனவே, முதல்வர் பதவியில் இருக்கும் பன்னீர்செல்வத்திற்கு, நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக, சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என, தம்பிதுரை, லோக்சபா துணை சபாநாயகருக்கான லெட்டர்பேடில், அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கை, பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி தருவதற்கு பதிலாக, சசிகலாவிற்கு நெருக்கடியை தந்து விட்டது. முதல்வர் பதவியை, உடனடியாக ஏற்க விரும்பிய சசிகலாவிற்கு, தம்பிதுரை அறிக்கை, பின்ன டைவை ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் மோதலால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால், சசிகலா குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.