Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 28, 2017

காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர காரணம் என்ன? தமிழக அரசுக்கு சீமான் கேள்வி



சென்னை நடுக்குப்பம் பகுதி மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் சென்னை மெரீனாவில் அறவழியில் போராட்டத்தை தொடங்கினார்கள். திட்டமிட்டு அரசும், காவல்துறையும் ஒரு வன்முறை களமாக மாற்றி நிறுத்தியிருக்கிறது. வேர்வையில் தொடங்கிய இந்த போராட்டம் ரத்தம் சிந்தும் போராட்டமாக முடிக்கப்பட்டுள்ளது.



23ஆம் தேதி மாலையில் சட்டம் இயற்றினார்கள். காலையில இந்த தடியடி நடத்த வேண்டிய அவசியமே இல்லை. சட்டம் இயற்றிய பிறகு அதை பேசுவதற்கு அரிபரந்தாமன் போல ஓய்வு பெற்ற நீதி அரசர்களை, சங்சர சுப்பு போல சட்ட வல்லுநர்களை பயன்படுத்துகிற இவர்கள், இவர்கள் தலைமையிலான ஒரு குழுவை அமைத்திருக்கலாம். போராட்டக்கார்களுடன் மாவட்ட ஆட்சியரோ, அமைச்சர்களோ, முதல் அமைச்சரோ பேச வரவில்லை. அப்படியிருக்கும்போது அந்த குழுவினர்கள், போராட்டக்குக் குழுவினருடன் பேசியிருந்தால், தமிழக அரசுக்கம், போராட்டக் குழுவினருக்கும் இவ்வளவு பெரிய இடைவெளி வந்திருக்ககாது.

அதைவிடுத்து திட்டமிட்டு மாணவர்களை அடித்து, பெண்களை நிர்வாணப்படுத்தி, கர்ப்பிணி பெண்களை அடித்து, குழந்தைகளை அடித்து அவ்வளவு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.  காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர காரணம் என்ன?  என தமிழக அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.