January 12, 2017
போயஸ் கார்டனுக்கு யாரும் வர கூடாது : உறவுகளுக்கு சசிகலா தடை?!
சசிகலா போயஸ் கார்டனில் திடீரென அவசர கூட்டம் ஒன்றை நடத்தினார். அவசர கூட்டம் என்றால் அமைச்சர்களோ, எம்.எல்.ஏக்களுக்கான கூட்டமோ அல்ல. தன்னுடைய உறவினர்கள் அனைவரையும் வரவழைத்து பேசினார். இந்த கூட்டத்தில் பேசுகையில், போயஸ் கார்டனுக்கு இனிமேல் விவேக்கும், ஜெயானந்தும் மட்டும் வந்தால் போதும். வேறு யாரும் வர வேண்டாம். உங்களுக்கு என்ன தேவை இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். இந்த அதிரடி முடிவை சசிகலா அறிவிக்க முக்கிய காரணம் தினகரன். அவர் மீது கடுங்கோபத்தில் உள்ளார் சசிகலா.
தினகரன் குறித்து சசிகலாவிடம் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேரடியாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த புகாரில், தினகரனின் பேச்சு தன் மனதை புண்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய அரசிடமும் மற்ற கட்சியினரிடமும் அ.தி.மு.க சார்பில் பேசக்கூடிய ஒரே நபர் தம்பிதுரை மட்டுமே. இந்த நிலையில் அவர் மனம் புண்படும் படி பேசிய தினகரனை அழைத்து “நீ எப்படி அவர் மனம் புண்படும்படி பேசலாம்?” என்று திட்டியிருக்கிறார்.
இதனையடுத்து தங்களது உறவினர்கள் யாரும் கட்சியிலோ, ஆட்சியிலோ தலையிடக் கூடாது என்றும், போயஸ் கார்டனுக்கு விவேக்கும், ஜெயானந்தும் மட்டும் வந்தால் போதும் என்றும் உத்தரவிட்டார். ஆனால், சசிகலாவின் இந்த உத்தரவு எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதே தற்போதைய கேள்வி
போயஸ் கார்டனுக்கு யாரும் வர கூடாது : உறவுகளுக்கு சசிகலா தடை?!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 12, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.