January 18, 2017
மாணவர்கள் பெற்றுத் தந்த தெலுங்கானா: இதோ ஜல்லிக்கட்டை பெற்றுத்தரப் போகும் மாணவர்கள்
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது. வந்தே விட்டது தமிழ்நாட்டில். மாணவ சக்தியை வெளிக்காட்டி உலகத்தின் கவனத்தைப் பெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் அரசாங்கம் என்று ஒன்று இருக்கிறதா? என்று கேட்கும் நிலையில் வாய் மூடிக் கிடக்கிறது அரசு நிர்வாகம்.
ஆனால், போலீசை விட்டு மாணவர்கள் போராட்டத்தை அடக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது என்பது தான் நிதர்சனம்.
காரணம் நமது இந்தியாவில் நடந்த தெலுங்கானா போராட்ட காலத்தைக் கூறலாம். தெலுங்கானா பிரச்சனை மாணவர்கள் கைக்கு போக ஆரம்பித்த நாள் முதல் பிரச்னை தீவிரமானது.
மாணவர்கள் தீக்குளித்து தியாகம் செய்தார்கள். மத்திய அரசு அடக்கு முறைகளை கைவிட்டு யோசிக்க ஆரம்பித்தது. நூற்றாண்டு கால பிரச்சனைக்கு தீர்வு கண்டவர்கள் மாணவர்கள் மட்டுமே.
இதோ சரித்திரம் திரும்புகிறது. ஜல்லிக்கட்டு என்கிற தமிழர் பாரம்பரிய வீரக் கலைக்கு பீட்டா என்கிற கொடூர வியாபாரிகள் சமாதி கட்ட நினைத்தார்கள்.
மாணவர்கள் உயிர் கொடுக்க ஆயத்தமாகி விட்டார்கள். வெல்லட்டும் மாணவர் படை.
மாணவர்கள் பெற்றுத் தந்த தெலுங்கானா: இதோ ஜல்லிக்கட்டை பெற்றுத்தரப் போகும் மாணவர்கள்
Reviewed by மறத்தமிழன்
on
January 18, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.