Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 30, 2017

முதலமைச்சரை ஏமாற்றிய போலீஸ்! பன்னீர் செல்வத்திற்கு பின்லேடன் வடிவில் சிக்கல்!


மெரினா போராட்டத்தில் பின்லேடன் உருவப்படத்துடன் சிலர் பங்கேற்றதாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் பேசினார்.

பா.ஜ.க. தலைவர்களின் பேச்சை மக்கள் கேட்காத நிலையில் அதே பாணியில் முதலமைச்சரே பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உளவுத்துறை கொடுத்த பொய்யான தகவலை அடிப்படையாக வைத்து அவ்வாறு பன்னீர் செல்வம் பேசியது அம்பலமாகியுள்ளது.

காரணம் அந்த புகைப்படம் மாணவர்கள் போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல.

இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதும், காவல்துறை அதிகாரி சங்கரிடம் செய்தியாளர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

ஆனால் அந்த புகைப்படம் எந்த தேதியில் எடுக்கப்பட்டது என்பதைக் கூட அவரால் சொல்ல முடியவில்லை.

இந்நிலையில் அந்த புகைப்படம் தடா ரகீம் என்பவர் தலைமையிலான தேசிய லீக் கட்சியினர் கடந்த டிசம்பர் மாதம் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது, அந்த போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இதனை அவர்களே ஒப்புக்கொள்ளும் போது, அது மெரினாவில் தான் பயன்படுத்தப்பட்டது என முதலமைச்சர் கூற வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதலமைச்சர் தவறான தகவல் அளித்ததாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் அது கடும் சிக்கலை ஏற்படுத்தும் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

மேற்கோள் : விகடன் இணையதளம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.