Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 23, 2017

நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.. போராட வேண்டாம், கொண்டாடுவோம்: லாரன்ஸ்


ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது என்பதால், நாம் வெற்றியை கொண்டாடுவோம் என்றும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மெரினா போராட்ட களத்தில் உடல் நல குறைவையும் பொருட்படுத்தாதது பங்கேற்றதோடு, சொந்த செலவில் உணவு, குடிநீர் சப்ளை செய்தவர் லாரன்ஸ்.


இந்நிலையில், மெரினாவில் இன்று போலீசார் தடியடி நடத்தியுள்ள சூழலில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் லாரன்ஸ் கூறியதாவது:


ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது. ஆளுநரும் இதை தனது உரையில் உறுதி செய்துவிட்டார். ஆனால் நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்பது யாருக்குமே புரியவில்லை. நமக்கு நிரந்தர வெற்றி கிடைத்த இந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் போராட வேண்டாம்.
எந்த இடத்தில் 7 நாட்களாக கஷ்டப்பட்டோமோ அதே மெரினாவில் இன்று இரவு நாம் வெற்றியை கொண்டாடுவோம். நானே நேரில் வந்து விளக்கம் அளிக்கிறேன். இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.