Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 21, 2017

வென்றது ஜல்லிக்கட்டு புரட்சி! தகர்ந்தது தடை! அவசர சட்டத்தை பிறப்பித்தார் ஆளுநர்!!


ஜல்லிக்கட்டு புரட்சியின் முதல் வெற்றியாக அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பித்துள்ளார். இதனால் தமிழகத்தில் நாளை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்தார். இதையடுத்து அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

மிருகவதை என்ற பெயரால் தமிழரின் பண்பாட்டு உரிமையான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. கடந்த 2 ஆண்டுகாலமாக இத்தடை உடையும் என தமிழகம் காத்திருந்தது.

ஆனால் தடை உடையவில்லை. மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டு தமிழக மக்கள் போர்க்களத்தில் குதித்தனர். அலங்காநல்லூரில் மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கி வைத்த புரட்சி விதை தமிழகம் முழுவதும் பற்றி எரிந்தது.

சென்னை மெரினாவில் பல லட்சம் பேர் 5 நாட்களாக திரண்டு போராடினர். ஒட்டுமொத்த தமிழகமே வீதிக்கு வந்து போராடியதால் வேறுவழியின்றி அரசுகள் பணிந்தன.

மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இதற்கான அவசர சட்டத்தை ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்திருக்கிறார். வரலாற்றில் இடம்பிடித்த ஜல்லிக்கட்டுப் புரட்சி தடையை உடைத்து சரித்திரம் படைத்திருக்கிறது!
வென்றது தமிழர் படை!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.