January 29, 2017
சென்னையில் கழிவு நீர் லாரி மோதி ஒருவர் பலி!
சென்னை நெசப்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான கழிவுநீர் லாரி மோதி ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், லாரியை தீயிட்டு கொளுத்தினர்.
சென்னை நெசப்பாக்கம் ஏரிக்கரையைச் சேர்ந்த ரமேஷ், அதே பகுதியில் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் இன்று நண்பர்களுடன் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ராமாபுரத்தில் இருந்து வந்த தனியாருக்கு சொந்தமான கழிவு நீர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து ரமேஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து லாரி ஓட்டுநர் ஹரி பாலகிருஷ்ணனை, அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், விபத்தை ஏற்படுத்திய லாரியையும் தீயிட்டு கொளுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் 8-வது முறையாக தொடர்ந்து இப்பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதால், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில், இப்பகுதி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னையில் கழிவு நீர் லாரி மோதி ஒருவர் பலி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 29, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 29, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.