January 2, 2017
சுவாதி முதல் சோனியா வரை
தமிழகத்தில் 2016ம் ஆண்டு ஒரு தலைக் காதல் சம்பவத்திற்கு பல இளம் பெண்கள் பலியாகியுள்ளனர். காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவங்கள் பல நிகழ்ந்தன.
ஜூன் 24: சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த 2016 ஜூன் 24ம் தேதியன்று பணிக்கு செல்வதற்காக காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தார். ரயிலுக்காக காத்திருந்த சுவாதியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு மர்மநபர் தப்பினார். அந்த மர்ம நபர் இவர் தான் என்று கூறி, ராம்குமாரை ஜூலை 1ம் தேதி இரவு கைது செய்தது போலீஸ். புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் செப்டம்பர் மாதம் தற்கொலை செய்ததாக அறிவிக்கப்பட்டதால், வழக்கு முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் இரண்டு மரணங்களின் மர்மங்களும் விலகவில்லை.
ஜூன் 27 : சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினுப்பிரியா என்ற இளம்பெண், மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக ‘மார்பிங்’ செய்து பேஸ்புக்கில் பதிவு செய்தது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத நிலையில் வினுப்பிரியா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
ஜூலை: 12 ஆம் வகுப்பு மாணவி நவீனாவுக்கு விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா காலனியைச் சேர்ந்த செந்தில் என்ற இளைஞர் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். நவீனாவின் வீட்டிற்கு அவரது பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்ற செந்தில், தன்னை காதலிக்க வேண்டும் என்று நவீனாவை மிரட்டியுள்ளார். செந்திலின் காதலை நவீனா ஏற்க மறுத்துவிட்ட நிலையில், தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு, மாணவி நவீனாவைக் கட்டிப்பிடித்துள்ளார். இதில் தீக்குளித்த செந்தில் உயிரிழந்து விட்ட நிலையில், ஒரு பாவமும் அறியாத மாணவி நவீனாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆகஸ்ட் 30: கரூர் பொறியியல் கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் சோனாலி, விடுதியில் தங்கி 3ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் உதயகுமார் வகுப்பறையில் நுழைந்து கட்டையால் அடித்து சோனாலியைக் கொலை செய்தார்.
ஆகஸ்ட் 31: தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினாவை, சீகன் கோமஸ் என்பவர் பள்ளி வளாகத்தில் வெட்டிக் கொலைச் செய்துவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலைச் செய்துகொண்டார்.
அதேநாளில் திருச்சியில் காதலை ஏற்றுக் கொள்ளாததால் மோனிஷா என்ற கல்லூரி மாணவியை, பாலமுருகன் என்பவர் கத்தியால் குத்தியிருக்கிறார். உடனே சுற்றி இருந்த பொது மக்கள் கற்களை எடுத்து பாலமுருகன் மீது வீசி தாக்கி, அவனைச் சுற்றி வளைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரியில் ரோஸ்லின் என்ற கல்லூரி மாணவி. எழிலரசன் என்பவரின் காதலை ஏற்றுக்கொள்ளாததால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவமும் ஆகஸ்ட்டில் நடந்தது.
செப்டம்பர் 15: கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் தான்யா. பொறியியல் பட்டதாரியான இவர், தன்னை காதலிக்கவில்லை என்ற விரக்தியில் ஜாகீர் என்பவர். கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். இதில், சம்பவ இடத்திலேயே தான்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
டிசம்பர் 7: சோனியா, என்ற இளம் பெண்ணை வினோத் என்ற இளைஞர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். காதலை ஏற்க மறுத்த சோனியாவை பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கழுத்தறுத்து கொலை செய்தார்.
தமிழகத்தில் 2016ம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 5847 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாதி முதல் சோனியா வரை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 02, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.