January 2, 2017
ஜெயலலிதாவின் சிகிச்சை விவரம் : ஆரம்பித்தது அடுத்த சர்ச்சை!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை விவரங்களை தர, மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக, தினம் தினம் புதுப்புது பிரச்சனை தொடர்ந்து எழுந்து கொண்டே உள்ளது. இது சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக, நீலகிரியைச்சேர்ந்த ஆசிரியர் ராஜ்குமார், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம், கேள்வி கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு, மருத்துவமனை தகவல் தர மறுத்துள்ளது.
இதற்கு மருத்துவமனை சார்பாக அனுப்பியுள்ள பதில் கடிதத்தில்,’ அப்பல்லோ மருத்துவமனை, இந்திய சட்டம், 1956ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, இயங்கும் பொது நிறுவனம். இந்நிறுவனம், தகவல் அறியும் உரிமை சட்டம், 2005ன், அதிகார எல்லைக்கு உட்படவில்லை. தாங்கள் கேட்ட விபரங்களை, எங்களால் வழங்க இயலாது. என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அலுவலகம் சார்பாக அளிக்கப்பட்டுள்ள பதிலில், தங்கள் விண்ணப்பம், தகவல் அறியும் உரிமை சட்டம்-2005, ஆறாவது பிரிவின் மூன்றாவது உட்பிரிவின் கீழ்படி, பொதுத்துறையின், பொது தகவல் அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுத்துறையின் மேல் முறையீடு அலுவலருக்கு, மேல்முறையீடு செய்யலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சிகிச்சை விவரம் : ஆரம்பித்தது அடுத்த சர்ச்சை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 02, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.