Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 23, 2017

மாணவர்கள் போர்வையில் வேறு யாரோ நுழைந்துள்ளனர்... நடிகர் ராகவா லாரன்ஸ் பகீர்


மாணவர்கள் போர்வையில் வேறு யாரோ நுழைந்து போராட்டத்தை திசை திருப்பியுள்ளனர் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் வீடு திரும்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள் மத்தியில் வேறு யாரோ கலந்து விட்டார்கள் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

மெரினாவில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக் கொண்டார்.
மேலும், சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த நடிகர் லாரன்ஸ் அளித்த பேட்டியில், மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக மட்டும்தான் 7 நாட்களாக போராடினார்கள் என்றும், ஆனால் மாணவர்களோடு தொடர்பு இல்லாத சிலர் வேறு சில கோரிக்கைகளை போராட்டத்தில் திணித்துள்ளனர் என்று லாரன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பித்ததுள்ள நிலையில், நாம் பெற்ற வெற்றியை கொண்டாட வேண்டிய நேரம் இது என்றும் இளைஞர்களிடம் லாரன்ஸ் எடுத்துக் கூறினார்.

மெரினாவில் இருந்து இளைஞர்கள், மாணவர்களை கலைந்து செல்லும் படி கேட்டுக் கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், மாணவர்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.