கடந்த மாதம் 12ம் தேதிதான் வர்தா புயல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் புரட்டிப்போட்டு சென்னையே கதிகலங்க வைத்துச் சென்றது. ஆனால், தொடர்ந்து வரும் புயல்களால் பேராபத்து உள்ளதாக 2014ம் ஆண்டு ‘எர்த் சயின்ஸ்’ என்னும் அறிவியல் பத்திரிகையில் செய்தி வெளியானதாக நமது லைவ்டே இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியில், தொழிற்சாலைகளின் தாக்கத்தால் கடலில் வெப்ப நிலை அதிகரிப்பதாகவும், இதன் காரணமாக வங்கக்கடலில் வெப்ப மண்டலப் புயல்கள் அதிகளவில் உருவாகும்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட அதாவது 1891ம் ஆண்டு முதல் 2013 வரையிலான புயல்களை ஆய்வு செய்த அவர்கள் இனி வரும் புயல்களால் பெரிய ஆபத்து நேரிடலாம். தீவு நாடான இலங்கையே மூழ்கும் அளவுக்கு ஆபத்து வரலாம் என அந்த புத்தகத்தில் கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
விஞ்ஞானிகள் கூறியுள்ளபடி பார்த்தால் அடுத்து வரப்போவது ‘மாருதா’ மற்றும் ‘மோரா’ புயல்கள் தான். இந்த புயல்களால் பெரும் ஆபத்துகள் விளையுமோ என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம், இயற்கையை சுரண்டி இந்த புவியை மலடாக்கிவிட்மோம். இனிமேல் இயற்கை தன் வித்தைகளை மனிதனை நோக்கி பாய்ச்ச ஆரம்பித்துள்ளது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் மனிதன் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையை பின்பற்றாவிட்டால் இந்த பூமியை வரும் தலைமுறைகளுக்கு காட்ட முடியாமல் கூட போகலாம் என்றும் கூறியிருந்தோம்.
இந்நிலையில், ஏற்கெனவே ‘வர்தா’ புயலுக்கு வேதரண்யம் தகட்டூர் கிராமத்தை சேர்ந்த வானிலை சாஸ்திர ஆர்வலர் ந.செல்வகுமார் புயல் தாக்குதல் குறித்து ஒரு டீக்கடையில் ஒட்டியிருந்தார். அதன்படியே வர்தா புயல் சென்னையை தாக்கியது குறிப்பிடத்தக்கது.
அந்த வானிலை ஆராய்ச்சி ஆர்வலர், தற்போது ‘மாருதா’ புயல் குறித்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை டீக்கடையில் அறிவிப்பு ஒன்றை ஒட்டியுள்ளார். அதில், பசிபிக் கடலில் உருவான கடலில் உருவான நாக்டென் புயல் பிலிப்பைன்ஸ் நாட்டில் க¬யை கடந்து செயலிழந்தது. இது காற்றழுத்த தாழ்வுநிலையாக நகர்ந்து, அந்தமான், இலங்கை, இந்தோனேசியா, இந்தியப்பெருங்கடல், வங்கக்கடல் இடையே நிலைகொண்டுள்ளது.
இந்த காற்றழுத்தாழ்வுநிலை, தென்மேற்கு இலங்கை, மாலத்தீவுபகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலையும் இணையும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஜனவரி 4ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக இது மாறி அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு ‘மாருதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ‘மாருதா’ புயல் வரும் 10ம் தேதிக்கு மேல் மியான்மர் நாட்டுக்கு நகரும் வாய்ப்புள்ளதாகவும், புயலின் தீவிரத்தைப் பொருத்தே இலங்கை அல்லது தமிழ்நாட்டின் காரைக்கால், நாகப்பட்டினம் பகுதிகளில் கரையை கடப்பதற்கான வாய்ப்புள்ளதா என்பது தெரியவரும்.
தற்போதைய சூழ்நிலையில் கன மழைக்கு வாய்ப்பு குறைவாக இருந்தாலும், கடலோரப்பகுதிகளில் மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.