Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 30, 2017

திருச்சி ஜல்லிக்கட்டு போராட்டம்.. சிறப்பாக செயல்பட்ட காவல் ஆணையருக்கு ஓபிஎஸ் பாராட்டு


ஜல்லிக்கட்டு போராட்டத்தை சரியான முறையில் கையாண்ட திருச்சி துணை ஆணையர் மயில்வாகனனுக்கு முதல்வர் பன்னீ்ர்செல்வம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி சென்னை, கோவை, மதுரை, சேலம், உள்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை, மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தின் போது சமூக விரோதிகளால் வன்முறை வெடித்தது. இதனால் கலவரம் மூண்டதில் சென்னை நகரம் போர்க்களமாக மாறியது

இதனிடையே சென்னையில் பல தெருக்களில் குடிசைகள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள், தெருவோரம் இருந்த காய்கறி கடைகள் மற்றும் இதர சொத்துகள் மீது போலீசாரே தீயிட்டுக் கொளுத்தினர். அந்த வீடியோ காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 7 நாட்களாக அமைதி வழியில் நடைபெற்ற போராட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்தது. அதேபோல் மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அப்போது தடியடியும் நடத்தப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் பெரியளவில் போராட்டம் நடந்த திருச்சியில் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் அமைதியாக முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் மாநகர காவல் துணை ஆணையர் மயில் வாகனன். போராட்டம் துவங்கிய நாளில் இருந்தே திருச்சி போலீசார் ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடந்துவிடக்கூடாது என்பதில் திருச்சி போலீஸார் உஷாராக இருந்தனர்.
இரவு பகலாக போராடிய மாணவர்களுடன் திருச்சி துணை ஆணையர் மயில்வாகனன், ஆரம்பம் முதலே சுமூகமான போக்கையே கடைபிடித்து வந்தார். அமைதி வழியில் போராட்டம் நடத்தி வரும் யார் மீதும் வழக்குப்பதியப்படாது என்பதை உறுதியாகச் சொல்லி வந்தார் துணை ஆணையர் மயில்வாகனன்.

போராடிய மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க வழி செய்தார். காவல்துறை மெரினாவில் தாக்கியதாக வீடியோ வைரலானபோது, அதுபோலியான வீடியோ என போராட்டக்காரர்களுக்கு விளக்கியதோடு, காவல்துறை உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் பயப்படவேண்டாம் என்பதையும் உறுதியாக தெரிவித்தார்.

சென்னை மெரினாவிலும் மதுரை அலங்காநல்லூர், கோவை உள்ளிட்ட இடங்களில் போலீஸார் மாணவர்களை அடித்து விரட்டிக் கொண்டிருக்கும்போது கூட அமைதியாகவே சரியாக நடந்து கொண்டார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இதன் விளைவாக போராட்டம் முடிவுக்கு வந்த இறுதி நாளில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை சரியான முறையில் கையாண்ட திருச்சி துணை ஆணையர் மயில்வாகனனுக்கு முதல்வர் பன்னீ்ர்செல்வம் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அதேபோல் திருச்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் செயல்பட்டதற்காக உயர்நீதிமன்றம் மயில்வாகனனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.