Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 3, 2017

ஜெயலலிதாவின் ‘சிகிச்சை புகைப்படம்’ வெளியீடு! சாவின் மர்மம் விலகுமா??



மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை மோசமானதையடுத்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிலிருந்து அவர் மாரடைப்பால் கடந்த மாதம் 5ம் தேதி உயிரிழந்து அவரின் உடல் போயஸ் தோட்டத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது வரை அவரின் சிகிச்சை குறித்த புகைப்படங்களோ, வீடியோ இதுவரை வெளியாகவில்லை. அதனால் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய வண்ணம் உள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தொண்டர் ஒருவர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் கூட, நீதிபதியே மர்மம் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 1990ம் ஆண்டு சென்னை தேவகி மருத்துவமனையில் சிகிச்சைபெறும்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா, புகைப்படம் எடுத்து வெளியிட சம்மதித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவிவருகிறது. ஆனால் அப்போலோவில் மட்டும் ஏன் ஒரு புகைப்படமோகூட இதுவரை வெளியிடவில்லை.

ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து புகைப்படம் வெளியிடாமல் தவிர்த்திருப்பது என்ன காரணம்? அப்போ.. மர்மம் இருப்பது உண்மையா? என்ற கேள்யை அதிமுகவினரிடையே எழச்செய்கிறது அல்லவா?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.