ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரும் இளைஞர்களுக்கு தான் ஆதரவு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கைஃப் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்ககட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், ஜல்லிக்கட்டிற்கு உலக புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு போலீஸார் தடை விதித்தனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும்,ஜல்லிக்கட்டு நடைபெற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நேற்று காலை 9 மணி முதல் இன்று காலை வரை சுமார் 21 மணி நேரமாக இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் சகோதரர்கள் நடத்திவரும் போராட்டத்தில் அவர்களது தீவிரம் மற்றும் அர்ப்பணிப்பு வியப்பளிக்கிறது. ஒரு காரணத்துக்காக ஒன்றிணைந்து அர்ப்பணிப்புணர்வுடன் போராடும் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கைஃப் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.