Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 4, 2017

நான் விலகிக் கொள்கிறேன். இனி கூப்பிடாதீர்கள்!” சசிகலாவிடம் பன்னீர் செல்வம் கண்ணீர்!



நேற்று போயஸ் கார்டன் சென்றார் பன்னீர் செல்வம். அங்கு தனியறையில் தினகரன், சசிகலா இருந்துள்ளனர். பன்னீர் செல்வத்தை வளர்த்துவிட்டவர் தினகரன்.
அந்த அடிப்படையில் அவரிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு அதட்டும் தோனியில் பேசினாராம் தினகரன்.
அப்போது திமிறி எழுந்திருக்கிறார் பன்னீர் செல்வம். இதனை தினகரன் எதிர்பார்க்கவில்லையாம். முன்னதாக சசிகலா பேசியபோது அதனை அமைதியாக கேட்டுள்ளார் பன்னீர் செல்வம்.
பிறகு “நான் உங்களுக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தேன். ஆனால் நீங்களோ இப்படி பேசுகிறீர்கள், என்னை பொருளாளர் பதவியில் இருந்தும் நீங்கள் நீக்க உள்ளதாக எனக்கு செய்திகள் வந்துள்ளன.
நான் விலகிக் கொள்கிறேன். இனி மேல் என்னை கூப்பிடாதீர்கள்” என வருத்தத்துடன் சொன்னாராம் பன்னீர் செல்வம். அப்போது குறுக்கிட்ட சசிகலா ” நீங்கள் எதற்கும் வருத்தப்பட வேண்டாம். எங்களுக்கு வந்த சில தகவல்களின் அடிப்படையில் உங்களிடம் இப்படி பேச வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது” என ஆறுதல் சொன்னாராம்.
பிறகு சசிகலா கேட்டபடி ராஜினாமா கடிதத்தை பன்னீர் செல்வம், சசிகலாவிடம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்ததாக மின்னம்பலம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.