January 9, 2017
ஜெயலலிதா தற்போது சசிகலாவிற்கு கடிதம் எழுதினால், எப்படி எழுதுவார்? கற்பனை!
நம்மை விட்டு மறைந்த ஜெயலலிதா அவர்கள் அவரது தோழி சசிகலாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினாராம்.
அதுதான் :தற்போது சமூகவளைதளத்தில் பரவி வரும் பரபரப்பு மேட்டராகியுள்ளது.
நாமும் அந்த கடிதத்தை படித்தோம். வாசகர்களுக்கும் பகிர்வோம். இந்த கற்பனை கடிதத்தை தயாரித்தவர்கள் சசிகலாவிற்கு எதிரானவர்களாக இருக்கலாம்.எனவே இந்த கடிதம் சொல்ல நினைக்கும் கருத்து இந்த இணையதளத்தின் கருத்து அல்ல.
அன்பு உடன் பிறவா தோழி சசி, உன் அன்பு அம்மு (ஜெயா) விண்ணுலகிலிருந்து எழுதும் மடல்.
நீ நலமா என்ற வரியை நான் எப்படி பதிவேன்?! ஏனென்றால் விண்ணுலக ஜன்னல் வழியாக நான் தினமும்பார்க்கிறேனே!!!
அதன் பின்பும் நீ நலமா என்று நான் எப்படி கேட்பேன்?
காட்சிகள் அரங்கேரும் வேகமும், நேர்த்தியும் என் முதுகிற்கு பின் நடந்த பல நாள் திட்டத்தின் பரமபத விளையாட்டா அன்பு தோழியே?
உனக்காக என் இரத்த உறவுகளை தள்ளி வைத்தேனே……என் கடைசி நிமிடத்தில் ஒரு பிடி காற்றுக்காக என் இதயம் ஏங்கியபோதுதான் உறவுகளின் அருமை நான் உணர்ந்தேன்.
நீ என்னை அக்கா என்றழைத்தாலும் நான் உனக்கு அன்னையாகத்தானே இருந்தேன்.
அமைதி வளம் வளர்ச்சி இது மக்களுக்காக….ஆனால் என்னை அமைதியாக்கி வளமும் வளர்ச்சியும் உனதாக்கி கொண்டாய்.
விண்ணுலகில் புரட்சித் தலைவர் என்னை பார்த்து கேட்கிறார்!
கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே இல்லை என்ற நீ!…நித்தம் நித்தம் துரோகிகளுடனே வாழ்ந்திருக்கிறாயே.
நான் என்ன பதில் சொல்ல முடியும்?. என் துரோக வரலாறு…..அடுத்த தலைமுறைக்கு நல்ல பாடமாக இருக்குமென்ற ஆறுதல் ஒன்று மட்டும் எனக்கு மிச்சமிருக்கிறது.
பாமரனுக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்தேனே “” இன்று ஒருவனும் எனக்காக கலங்காததை நினனைக்கும் போது!
உன் அம்முவிற்க்கு நெஞ்சு வலிக்கிறது தோழி.
உடைந்த மீன் தொட்டியிலிருந்து தரையில் விழுந்த மீன்களாய்……..தத்தளித்து கொண்டிருக்கும் என் அப்பாவி தொண்டர்களை, நான் எப்படி ஆற்றுவேன், தேற்றுவேன்.
ஒன்றை மட்டும் சொல்கிறேன் இந்த துரோக வரலாறின் கடைசி பக்கத்தில் உனக்கான காட்சிகள் அரங்கேரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இப்படிக்கு
உன் உடன்பிறவா தோழி
அம்மு..
ஜெயலலிதா தற்போது சசிகலாவிற்கு கடிதம் எழுதினால், எப்படி எழுதுவார்? கற்பனை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 09, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.