January 8, 2017
கார்டனில் சசியிடம் தலையில் அடித்துக் கொண்டு கதறிய வேதாதி! பயத்தில் குடும்பத்தினர்!
கடந்த ஆண்டு செப் – 22ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா நீர்ச்சத்து குறைபாடு மூச்சுத்திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதற்கு அடுத்த நாள் 23ஆம் தேதி பருத்த உடல் கொண்ட ஒரு புரோகிதர் அப்போல்லோ மருத்துவமனைக்குள் நுழைவதும் அவரை காவலுக்கு நின்ற போலீஸ்காரர்கள் பின்பக்க வாசல் வழியாக செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பிற்கு கரணம் அன்று அப்போல்லோவிற்கு சென்ற புரோகிதர்தான் ஜெயலலிதா மறைந்த பிறகு இறுதி சடங்குகள் செய்தவர்.
அதாவது ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அன்றே இறந்து விட்டதாகவும், அதனால் புரோகிதர் வரவழைக்கப்பட்டு சடங்குகள் செய்தததாகவும் கூறப்படுகிறது.
அந்த புரோகிதரின் பெயர் வேதாதி என்பதாகும். இவர் சென்னை டி.நகர் அகஸ்தியர் கோவில் புரோகிதர் ஆவார்.
சசிகலாவின் இஷ்ட தெய்வங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு அவர் பல ஆண்டுகளாக சென்று வருகிறார்.
அந்த வகையில் இந்த வேதாதியும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே ஜெயலலிதவுக்கும் நன்கு அறிமுகம் ஆனவர் ஆவார்.
கார்டன் வட்டாரத்தோடும் அதிமுக தலைமையோடும் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தவர்தான் இந்த வேதாதி.
அதனால் ஜெ. உடல் நலக்குறைவு ஏற்பட்ட உடனே அவரை எல்லோரையும் போல நலம் விசாரிப்பதற்க்காகதான் வந்தார் என்று கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல்வரை சந்திக்க சென்றது தவறா? என தன்னை பற்றி வரும் தவறான தகவலால் நொந்து போய் தலையில் அடித்து கொண்டு கார்டனில் சசிகலாவிடம் கதறி அழுததாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்டனில் சசியிடம் தலையில் அடித்துக் கொண்டு கதறிய வேதாதி! பயத்தில் குடும்பத்தினர்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 08, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.