Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 23, 2017

திருவல்லிக்கேணியில் மீண்டும் கண்ணீர் குண்டு வீச்சு… தடியடி.. பெண்கள், குழந்தைகள் பீதி


திருவல்லிக்கேணியில் மீண்டும் கண்ணீர் குண்டு வீச்சை போலீசார் நடத்தியுள்ளனர். இதனால் இந்தப் பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் பீதி அடைந்துள்ளனர்.

திருவல்லிக்கேணியில் மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சை போலீசார் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதனால் இந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இன்று அதிகாலை முதல் சென்னை மெரினாவில் போராட்டம் செய்த மாணவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதில் இருந்து சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகள் போர் களம் போன்று சின்னாபின்னமாக காட்சியளிக்கிறது.

போராட்டத்தில் தொடர்ந்து நடத்த முயலும் மாணவர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். ஆனாலும் மாணவர்கள் அங்கேயே இருந்து போராடி வருகின்றனர். இதனிடையே, மர்ம நபர்கள் சிலர் ஐஸ் அவுஸ் காவல்நிலையத்தில் தீ வைத்துள்ளனர். இதனால் பெரும் பதற்றம் இப்பகுதியில் நிலவி வருகிறது.

இதனால், மீண்டும் கண்ணீர் புகை குண்டை போலீசார் வீசியுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி அப்புறப்படுத்தி வருகின்றனர். கண்ணீர் புகை குண்டு வீச்சி, கல்வீச்சு, தடியடி என தொடர்ந்து நடைபெற்று வருவதால் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் பீதியில் உள்ளனர். அனைவரும் வீட்டை தாழ் போட்டுக் கொண்டு வீட்டிற்குள் அச்சத்தோடு இருந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.