January 8, 2017
சின்னம்மா, அம்மாவுக்கு மேல்.. சொன்ன வளர்மதிக்கு பரிசு! தமிழக பாடநூல் கழக தலைவரானார்!
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெள்ளிக்கிழமை பிறப்பித்தார். வளர்மதி கடந்த 2011-16ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் சமூக நலன், -சத்துணவு திட்டத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வளர்மதி, தனது குடும்பத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை இன்று சந்தித்து ஆசி பெற்றார்.
சசிகலா, ஜெயலலிதாவிற்கு மேல் என்று பொருள்படும் வகையில் கருத்து தெரிவித்து, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளானவர் வளர்மதி என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னம்மா, அம்மாவுக்கு மேல்.. சொன்ன வளர்மதிக்கு பரிசு! தமிழக பாடநூல் கழக தலைவரானார்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 08, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.