Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 21, 2017

அவசர சட்டம் என்பது அல்வா கொடுப்பதை போன்றது.. போராட்டத்தை கைவிட மாட்டோம்: மதுரை மக்கள்


ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல, மதுரை தமுக்கம் மைதானத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் போராடி வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக இன்று ஆளுநர் அவசர சட்டத்தில் கையெழுத்திட்ட நிலையில், தமுக்கம் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

தமுக்கம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் சிலர் கூறுகையில், அவசர சட்டத்தை எப்போதோ இயற்றியிருக்கலாமே. ஏன் இப்போது செய்கிறார்கள். தமிழக அரசும், மத்திய அரசும், மக்களை வஞ்சிக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
அவசர சட்டம் 6 மாதங்கள்தான் நீடிக்கும். இதன் மூலம் மாணவர் போராட்டத்தை கலைக்கத்தான் முயற்சி செய்கிறார்கள். அவசர சட்டம் என்பது அல்வா கொடுக்கும் விஷயம். மதுரைக்காரங்க நாங்களே பல பேருக்கு அல்வா கொடுத்திருக்கோம். எங்களுக்கே அல்வா தருகிறார்கள். நிரந்தர சட்டம் கொண்டுவராவிட்டால் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவை கருப்பு தினமாகவே கொண்டாடுவோம்.
இவ்வாறு மதுரை தமுக்கம் மைதானத்திலுள்ள இளைஞர்கள் சிலர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.