January 12, 2017
கணவனை கொல்ல முயன்ற கள்ளக்காதல் ஜோடியை மரத்தில் கட்டிவைத்து சரமாரி அடி, உதை
ஸ்ரீகாளஹஸ்தி – ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபல்லி மண்டலம், மொலகலசின்னா கிராமத்தை சேர்ந்தவர் பாபு(30), கூலித்தொழிலாளி.
இவரது மனைவி சுகுணா(28). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு நிம்மனபல்லி மண்டலம், குரவப்பல்லி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான பொன்னையா என்பவரிடம், சுகுணா சித்தாள் வேலைக்கு சென்றார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
சில நாட்களுக்கு முன்பு இதையறிந்த பாபு இருவரையும் எச்சரிக்கை செய்ததோடு, கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆனாலும் அவர்களது கள்ளத்தொடர்பு நீடித்து வந்துள்ளது. இதற்கிடையில் ஆத்திரமடைந்த சுகுணா, பொன்னையா ஆகியோர் பாபுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாபுவை பொன்னையாயும் சுகுணாவும் சேர்ந்து தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றனர். இதனால் பாபு அலறி சத்தம் போட்டார்.
சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதையறிந்த கள்ளக்காதலர்கள் வீட்டில் மற்றொரு அறையில் பதுங்கினர்.
அவர்களை மக்கள் வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
இதுகுறித்து மதனபல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடம் வந்த சப்-இன்ஸ்பெக்டர் ரவிபிரகாஷ் ரெட்டி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
கணவனை கொல்ல முயன்ற கள்ளக்காதல் ஜோடியை மரத்தில் கட்டிவைத்து சரமாரி அடி, உதை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 12, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.