Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 15, 2017

அலங்கநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு அமைப்பினர் விடுக்கும் ஓர் அறிவிப்பு !


ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பொங்கி எழுந்துள்ள அரசியல் கட்சியினர் , மற்ற பிரபல அமைப்பினார் , பேட்டி கொடுக்கும் பேச்சாளர்கள் கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.

நீங்கள் அனைவரும் ஜல்லிகட்டு நடைபெறும் இடத்திற்கு உடனே புறப்பட்டு வந்து எங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தால் நாங்கள் ஜல்லிக்கட்டு எற்பாடுகளை உடனடியாக செய்து ஜல்லிக்கட்டை நடத்த ஏற்பாடு செய்கிறோம் ஓர் லட்சம் பேர் ஒவ்வொரு இடத்திலும் பாதுகாப்பு அரணாக இருந்தால் நீங்களும் நாங்களும் தமிழ் காலச்சாரத்தை காக்க எதையும் தியாகம் செய்ய தயார் என்பதை இந்த நீதிமன்றத்திற்கும் உணர்வுற்ற அரசுக்கும் உலகுக்கும் உணர்த்த முடியும்.

ஆதலால் உண்மையில் தமிழ் காலச்சாரத்தை காக்க நினைக்கும் அரசியல்வாதியாக நீங்கள் இருந்தால் உங்கள் தொண்டர் படையை இங்கு அனுப்புங்கள் மாணவ செல்வங்களே நீங்கள் அனைவரும் இங்கு வாருங்கள் காலச்சரத்தை காக்க புறப்பட்டுருக்கும் படையே இங்கு வாருங்கள் நீங்கள் இங்கு வந்தால் உணர்வின் வெளிப்பாடு வெளியில் தெரியும் இல்லையென்றால் தமிழனின் வீரம் டெல்லிக்கு தெரியாது புறப்பட்டு வாருங்கள் பாலமேட்டை நோக்கியும் அலங் நல்லூரை நோக்கியும் என்று இரு கரம் கூப்பி அழைக்கிறோம்.

இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? என்று கேட்க தோன்றும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இச்செய்தியை அனைத்து குரூப்புகளுக்கும் கொண்டு சேர்க்கவும் அத்துடன் இல்லாமல் வீரனாக புறப்பட்டு வாருங்கள் என்று மீண்டும் ஒருமுறை கரம் கூப்பி வேண்டுகிறோம்.

இப்படிக்கு
ஜல்லிகட்டு அமைப்பினர்
அலங்கநல்லூர்
பாலமேடு

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.