Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 9, 2017

ஒத்த ஆண்பிள்ளைக்கு ஆபத்து…! மடி பிச்சையெடுக்கும் பெண்கள்..! அடிஆத்தி இது என்ன புது கதை..!



பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்குழந்தைகளுக்கு ஆபத்து என தகவல் பரவியது. இதனால் பீதியடைந்த பெண்கள் கோவில்களில் மடிப்பிச்சை எடுத்து பரிகாரம் செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரே ஒரு ஆண் குழந்தை உள்ள குடும்பங்களுக்கு 2017ஆம் ஆண்டு ஆபத்து என தகவல் பரவியது. மேலும் அந்த ஆண்குழந்தைகளுக்கும் ஆகாது எனவும் வதந்தி பரவியது.
இதற்கு பரிகாரமாக ஒரு ஆண்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் 7 வீடுகளில் மடிப் பிச்சை எடுத்து விநாயகர் கோவிலில் விளக்கேற்றி வழிபட வேண்டும் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதனால் பீதியடைந்த பெண்கள் 7 வீடுகளில் மடிப்பிச்சை எடுத்தனர்.
பின்னர் அங்குள்ள கோவிகளில் தீபம் ஏற்றி அவர்கள் பரிகாரம் செய்தனர்.
இந்த வதந்தி வேகமாக பரவியதால் ஏராளமான பெண்கள் மடிப்பிச்சை எடுத்து பரிகாரம் செய்தனர். இதனால் தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.