January 3, 2017
நான் அவன் இல்லை’ பாணியில் பல பெண்களை ‘ரேப்’ செய்த ‘டூப்’ மன்னன்
திருமண இணையதளத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் என் பொய் சொல்லி பெண்னை கற்பழித்தவரை போலீசார் கைது செய்தனர்.
புனேவை சேர்ந்த அமித் ஜாதவ், 28. பிரபல திருமண இணையதளத்தில், தன்னை ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவர் என பதிவு செய்துள்ளார். இதையடுத்து அந்த தகவல்கள் மூலம், மும்பையை சேர்ந்த ஒரு பெண் அவரை தொடர்பு கொண்டு அவரிடம் பேசியுள்ளார்.
இதையடுத்து இருவரும் தங்களது மொபைல் பரிமாறிக்கொண்டுள்ளனர். பின் இருவரும் அடிக்கடி போனில் பேசியுள்ளனர். இந்நிலையில் அமித், தனது கம்பெனி வேலையாக இரண்டு ஆண்டுகள் வெளிநாடு செல்லவுள்ளதாக அந்த பெண்ணிடம் கூறி பிளாட்டிற்கு வரவழைத்துள்ளார். அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்து, அவரை பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.
பின் அவரிடம் விசா பெற பணமும் பெற்றுள்ளார் அமித். இரண்டு மாதத்துக்கு பின் அந்த பெண்ணுக்கு போன் செய்து அவரின் தொடர்பை முடித்துகொள்ளும்படி தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண், அமித் இடம் தனது பணத்தை திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். அமித் முடியாது என சொல்ல, அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அமித்தை கைது செய்து விசாரித்ததில், இதே பார்முலாவில் 4க்கு மேற்பட்ட பெண்களை அமித் கற்பழித்த விஷயம் தெரியவந்துள்ளது.
A 28-year-old Pune resident was arrested on Saturday for duping a Mumbai woman by posing as a software engineer on a matrimonial website and raping her after promising marriage. The police have come to know that the accused, Amit Jadhav, who hails from Baramati, has conned and raped at least four more women using the same modus operandi.
நான் அவன் இல்லை’ பாணியில் பல பெண்களை ‘ரேப்’ செய்த ‘டூப்’ மன்னன்
Reviewed by மறத்தமிழன்
on
January 03, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.