Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 31, 2017

சென்னை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- மாநகராட்சி அதிரடி!!


சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை சரவண பவன் ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இன்று சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கேகே நகரில் 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது சரவண பவன் ஹோட்டல். தற்போது இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது சரவண பவன் ஹோட்டல்.

இதன் உரிமையாளர் ராஜகோபால் சில ஆண்டுகளுக்கு முன்னர் 2வது, 3வது திருமண விவகாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டவர். கொலை வழக்கிலும் சிறைக்கும் போயிருந்தார். இருந்தபோதும் இந்த சர்ச்சைகளால் அவரது ஹோட்டல் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

வழக்கம் போல சரவண பவன் ஹோட்டல் கொடி கட்டிப் பறந்தது. இந்த நிலையில் இன்று திடீரென சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் கிளைக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குவதாக கூறி அதை பொதுமக்கள் முன்னிலையில் சீல் வைத்து இழுத்து மூடினர்.
சரவண பவன் ஹோட்டல் சீல் வைக்கப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.