Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 31, 2017

பொது பட்ஜெட் நாளை தாக்கல்.. நாடாளுமன்ற வளாக அறையில் திடீர் தீ


நாடாளுமன்றத்தில் உள்ள 50வது அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள 50வது அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாளை பொது பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அறை எண் 50ல் திடீரென தீ பிடித்து அங்கிருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் உடனே இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 12 வாகனங்களில் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து தகவல் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தில் யாரும் காயம் அடைந்ததாக தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.