January 16, 2017
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் செய்யாத தவறுக்காக இன்னல்களை அனுபவிக்கிறேன்: திரிஷா வேதனை
நடிகை திரிஷா தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இல்லை என்பதை டுவிட்டரில் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தான் பிறப்பால் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை அடைவதாகவும், தமிழ்ப் பண்பாட்டைப் பெரிதும் மதிப்பவள் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தன் வளர்ச்சிக்கு உரமும் ஆக்கமுமாய் இருந்த தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான கருத்துக் கொண்டவள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தன்னைப் புரிந்துகொள்ளாமல் வீசப்படும் கண்டனக்கணைகள் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் துயரத்திலும், மன உளைச்சலிலும் ஆழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனையான காலக்கட்டத்தில் தனக்கு ஆதரவாய் இருக்கும் சக நடிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் திரிஷா குறிப்பிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் செய்யாத தவறுக்காக இன்னல்களை அனுபவிக்கிறேன்: திரிஷா வேதனை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.