Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 5, 2017

கனடா “காசு சேர்க்கும்” இலாப நோக்கற்ற நிறுவனங்களில் இயக்குனர்களாக தகுதிநிலை என்ன?



கனடாவில் பதிவு செய்யப்பட்ட இலாபநோக்கற்ற நிறுவனங்களின் இயக்குனர்களாக இருப்பவர்களிற்கான தகுதிகள் ஆராயப்படாமல் நபர்கள் இயக்குனர்களாக இணைக்கப்பட்டால் ஏனைய இயக்குணர்கள் சிறை செல்லவேண்டிய நிலையுள்ளதை பலரும் அறிந்திருக்கிவில்லை.
குறிப்பாக ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தில் இணையும் ஒருவர் நிதியடிப்படையில் [reasonably fit to be a director]தகுதியானவரா என்பதை இயக்குனர்கள் ஆராய வேண்டும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிதி வங்குரோத்துக் கோரியவர்கள் [bankruptcy] இயக்குனராக இருக்க முடியாது.
அதேபோன்று தனது பெயரில் வாகணமோ அல்லது சொத்தோ அடையாளப் படுத்தப் பட்ட வருமாணமோ இல்லாத ஒரு நபர் இயக்குனராக இருக்கின்ற சம்பவங்கள் பல பிராந்திய இனக்குழுமங்கள் சார்ந்த அமைப்புக்களில் இருக்கின்றன.
இவ்வாறான நபர்கள் தங்களது மனைவியரின் பெயரில் வாகணம், வீடு போன்றவற்றை வைத்திருப்பதுடன் வருமாணம் எதனையும் பெறாமல் இருப்பதானது இவர்கள் வசிப்பதற்கு எவ்வாறு காசு பெறுகின்றார்கள் என்ற கேள்வியை இயக்குனர்களிற்கு ஏற்படுத்தும்.
அதேபோன்று சீட்டுப் பிடித்தல், சட்டவிரோதமாக வட்டிக்குப் பணம் கொடுத்தல் போன்றவற்றை [money laundering] செய்பவர்கள் கூட இத்தகைய பதவிகளிற்கு ஏற்றவர்களல்ல.
இவ்வாறானவர்களை இயக்குனர்களாக இணைத்து அவர்கள் அந்த அமைப்பின் பெயரில் மோசடிகளிலோ அல்லது பணச் சேர்க்கையிலோ ஈடுபட்டால் அந்த அமைப்பும் அதற்காகத் தண்டிக்கப்படும்.
அது கூட பெறப்படும் பணம் அந்த அமைப்பின் பெயரில் பெறப்படவில்லையானால் அவர்கள் தாமாகவே மோசடிகளில் ஈடுபடும் சந்தர்ப்பத்தை அந்த அமைப்பு வழங்குகின்றது. உத்தியோகபூர்வமாக இயக்குனர் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணம், பணச்சேர்க்கைக்கான விளக்கக் கையோடு, பற்றுச்சீட்டு என்பன வழங்கப்படுவதுடன்,
பணம் தந்தவர்கள் அனைவரது பெயரும், நிகழ்வுகளிற்கான உத்தியோகபூர்வ செலவுகளும் கணக்காய்வு செய்யப்பட்ட சமர்ப்பிக்கப்படாவிட்டால், வருமாணவரிச் சட்டத்தின் கீழ் மேற்படி இயக்குனர் சபை தண்டிக்கப்படும்.
எனவே நீங்கள் இயக்குனர்களாகத் தேர்வு செய்பவர்கள், வருமாணவரி சமர்த்திருக்கின்றார்களா [notice of assessment], அவர்கள் தொடர்ச்சியாக ஒரு நிலையான தொழிலில் இருக்கின்றார்களா, வீடு, வாகணம் போன்றவை அவர்களது பெயரில் உள்ளதா? கடந்த பத்தாண்டுகளில் பொருளாதார வங்குரோத்துக் கோரியிருக்கின்றார்களா [bankruptcy]என ஆராய்வதோடு,
அவர்களது பொலிஸ் நற்சாண்றிதழை [police clearance] ஆண்டுதோறும் பெற வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாவிட்டால் அந்த அமைப்பிலுள்ள அனைவருக்குமே அது ஆபத்தாக முடியும்.
உதாரணத்திற்கு ஒரு பிராந்திய இன அமைப்பிலுள்ளவர் பொருளாதார வங்குரோத்துக் கோரி, தனது பெயரில் வீட்டையோ, வாகணத்தையோ வைத்திருக்க முடியாதவராகவும், வருமாணம் எதனையும் உழைத்துப் பெறாதவராகவும் இருந்தாலும் அவருக்கு தங்கள் அமைப்பின் பெயரில் இயக்குவதற்கு அந்த ஒண்றியம் அனுமதி கொடுத்துள்ளது.
சிலர் தாங்கள் cleaning company போன்ற வர்த்தகங்களை வைத்திருக்கிறோம் எனப் பொய்யான அறிமுக அட்டைகளை வைத்திருந்தாலும், அவர்கள் அவ்வாறான நிறுவனங்களிற்கு வரி நிரப்புகை வருடாந்தம் செய்த வரலாறே இல்லை. ஏனென்றால் அது அவர்களைப் பொய்யாக ஒரு தகுதியுள்ளவராக அறிமுகப்படுத்த அச்சிடப்பட்ட அறிமுக அட்டையாகும்.
இவ்வாறானவர்களால் சேர்க்கப்படும் நிதி எங்கே செல்லும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ள முடியும். அவ்வாறானவர்களை மேற்படி ஆதரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஒண்றியம் கோருமிடத்து அவர்களாகவே காணமல் போய் விடுவார்கள்.
தமிழாக்கம்: சுதர்மா
இணையத்தில் கிடைத்தவை:
COMMON LAW LIABILITIES OF NFP DIRECTORS
• Liability for Breach of Fiduciary Duty
– Directors and officers have a fiduciary duty to put the best interests of the corporation ahead of their own
– Examples of breach of fiduciary duty can include mismanagement of corporate funds and property, or the misappropriation of corporate opportunity
– Directors and officers can be found liable for any loss that the corporation suffers as a result of breach of fiduciary duty
• Liability for Breach of Corporate Authority
– When directors permit the corporation to act beyond the scope of the authority set out in the corporation’s objects, the directors may be found personally liable for ultra vires actions
– Ultra vires will not be a concern under the CNCA and ONCA, as they give the corporation the same powers of a natural person as those given to directors of for-profit corporations under modern business corporations legislation
– However, every director is still under a duty of obedience to comply with the objects stated in the articles of by-laws
• Liability Risk for Negligent Mismanagement (Tort)
– Tort is civil wrong for which injured party can seek damages from the court
– If their carelessness in the oversight of the corporation’s operations leads to injury, directors of charities can be found liable in tort for negligent mismanagement, for instance:
 Failing to adequately supervise hiring of staff and employees
 Failing to implement a child protection policy
 Failing to monitor the on-going conduct of staff and employees, especially in regard to sexual harassment of employees
 Wrongful dismissal-where directors acted with malice or otherwise improperly dismissed the employee
 Permitting unsafe conditions on corporation’s property leading to an accident
 Knowingly drawing cheques against insufficient funds
 Knowingly depleting corporate assets
• Liability Risk in Contract
– Directors generally are not personally responsible for contracts signed for the corporation unless they are found to have intended to assume personal liability
– However, they need to have proper corporate authority to sign contracts and ensure contractual terms are complied with
– To reduce liability exposure, directors need to ensure contracts are duly authorized by the board before entering into them
– Common problems in relation to breach of contract for directors:
 The directors do not properly identify the corporation in any contract or to the contracting party
 The other party believes the director is signing in his or her own name
 The directors are found to have induced a breach of contract with other parties prior to the signing of the contract
 The directors do not follow through to ensure that the corporation complies with a contract
• Federal Statutes
– Income Tax Act (Canada)
 Directors are jointly and severally liable to pay employee income tax deductions for claims brought within two years after end of term of office as a director
 Directors may also face fines and imprisonment if they are involved in making false or deceptive statements or evading compliance with the Income Tax Act

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.