January 18, 2017
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
சென்னை: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் ஆவேசமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்து வருவது போராட்டக்காரர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு குறிப்பிட்ட சில அரங்குகளில் இன்று சிறப்புத் காட்சி திரையிடப்பட்டன.
தமிழ் திரையுலகினர் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதையொட்டி, சென்னை அபிராமி தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் படம் சிறப்பு காட்சி இன்று திரையிடப்பட்டது.
இந்தநிலையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை அபிராமி தியேட்டரில் முதலமைச்சர் பார்த்து வருகிறார். இதை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் உலாவி வருகிறது.
அதில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோயம்புத்தூரில் மாற்றுத்திறனாளி ஒருவர் போராடி வரும் நிலையில், நம்முடைய முதல்வர் இந்தப் பிரச்சினை பற்றி எல்லாம் கவலைப் படாமல் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்து வருவது போன்று உள்ளது. இதனை பத்திரிக்கையாளர் மகாலிங்கம் பொன்னுசாமி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதல்வர் அபிராமி தியேட்டரில் படம் பார்த்து வருவது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 18, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.