Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 15, 2017

மனைவியை திட்டமிட்டு கொலை செய்த இலங்கையர் : குவைத்தில் மரணத்தண்டனை



குவைத்தின் சல்மிய பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் கணவன் மனைவி இடையே இருந்த பகை காரணமாக மனைவியை திட்டமிட்டு கணவர் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கணவன் மனைவி இடையே இருந்த சண்டை காரணமாக வீட்டில் இருந்த சிலிண்டரின் குழையினை குறித்த நபர் சிறிய அளவில் துளையிட்டு வைத்துள்ளார்.
இதில் கேஸ் வாயு அறை முழுவதும் பரவியது. இதையடுத்து பெண் சமையல் செய்ய தீ பற்றவைக்கும் போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடியிருப்பு முழுவதும் தீக்கிரையானது..
இதில் மனைவி உட்பட இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர். இதை மறைத்து கணவன் தன்னுடைய உடலிலும் காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
முதலில் சாதாரணமாக விபத்து என்றே கருதப்பட்டது. ஆனால் அந்த காயங்களை பார்த்த அதிகாரிகளுக்கு சந்தேகம் வர தீவிர விசாரணை செய்தனர். இதில் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து இது பற்றி விசாரணைகளை மேற்கொண்ட அந்நாட்டு நீதிமன்றம் நேற்று மரணத்தண்டனை விதித்துள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.