January 22, 2017
ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நத்தம் விஸ்வநாதன்.. தண்ணீர் பாக்கெட்களை வீசி விரட்டிய மக்கள்!
நத்தம் கோவில்பட்டியில் நடத்தப்படுவதாக இருந்த ஜல்லிக்கட்டு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. நத்தம் விஸ்வநாதன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
ஜல்லிக்கட்டு நடத்த பேச்சுவார்த்தை நடத்த வந்த ஜல்லிக்கட்டு குழுவினர் மீது தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கடும் எதிர்ப்பால் நத்தம் கோவில்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
வாடிவாசல் முன்பும், மாடுகள் வெளியேறும் பகுதியிலும் ஏராளமானவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வாடிவாசலுக்கு கொண்டு வரப்படும் காளைகளையும் திருப்பி அனுப்புகின்றனர். கிராம மக்களுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழக அரசு நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
நத்தம் விஸ்வநாதன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. நத்தம் உள்ளே வராதே.. அரசியல்வாதி உள்ளே வராதே என மக்கள் கோஷம் போட்டனர். முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் ஜெயலலிதாவின் கடந்த ஆட்சி காலத்தில் அவருக்கு நெருக்கமானவராக இருந்தார். ஆனால் சசிகலா தரப்பு இவரை ஒதுக்கி வைத்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்தி மேலிடத்திடம் நல்ல பெயரை பெறலாம் என நினைத்து வந்த நத்தம் விஸ்வநாதன் முயற்சிக்கு தோல்வி கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டு பிரச்சினையை தனது அரசியல் மைலேஜுக்கு பயன்படுத்த முனைந்த நத்தம் விஸ்வநாதன் செயல் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நத்தம் விஸ்வநாதன்.. தண்ணீர் பாக்கெட்களை வீசி விரட்டிய மக்கள்!
Reviewed by மறத்தமிழன்
on
January 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.