Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 3, 2017

உன் தங்கையை எனக்கு கொடு!.. என் மகளை நீ எடுத்துக்கோ!.. அசிங்கத்தின் மறு உருவம்!..



பாகிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் வாசிம் அகமது (36) என்ற நபர். இவர் தற்போது செய்திருக்கும் ஒரு விஷயம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பருவத்துக்கு வந்த தன் மகளை அண்டை வீட்டில் வசிக்கும் ரம்ஜான் என்னும் நபரிடம் நிரந்தரமாக கொடுத்த வாசிம், அதற்கு ஈடாக ரம்ஜானின் சகோதரி சைமாவை இரண்டாவது திருமணம் செய்ய அவரிடம் இருந்து நிரந்தரமாக வாங்கியுள்ளார்.
இது குறித்து பேசிய வாசிம், எங்கள் வீட்டு பெண்ணை மற்றவர்களுடன் மாற்றி கொள்ள எங்களுக்கு உரிமை உள்ளது. இதில் யாரும் தலையிட முடியாது என கூறியுள்ளார்.
16 வயதுகுட்பட்ட பெண்ணை திருமணம் செய்வது அந்நாட்டில் சட்டபடி குற்றம் என்பதால் வாசிமை போலீஸார் கைது செய்தனர். ஆனால் தான் திருமணம் செய்ய போகும் சைமாவிற்கு 16 வயது ஆகிவிட்டது என அவர் நிரூபித்ததால் , அவர் விடுதலை செய்யப்பட்டார்.
வாசிம் அகமது மட்டும் இவ்வாறு செய்யவில்லை, பாகிஸ்தான் நாட்டில் பழமைவாதத்தை பின்பற்றும் பல கிராமங்களில், இது போன்ற விஷயங்களை பலர் இன்னும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.