Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 9, 2017

விவசாயிகள் யாரும் மரணிக்கவில்லை: அமைச்சரின் அலுவலகத்திற்குள் புகுந்து விவசாயிகள் போராட்டம்!


திருச்சியை சேர்ந்த அமைச்சரை கண்டித்து அவரது அலுலகத்தில் உள் இருப்புப் போராட்டம் நடத்தியும் கருப்புக் கொடி காட்டியும விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

அமைச்சர் திரு.வெல்லமண்டி நடராசன், திருச்சியில் விவசாயிகள் யாரும் இறக்கவில்லை என்றும், தமிழகம் முழுவதும் வறட்சி இல்லை எனவும் கூறியிருந்தார்.

இதை கண்டிக்கும் விதமாக அமைச்சரின் அலுவலகத்திற்குள் புகுந்து விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் களைந்து செல்ல மறுத்ததால்  அவர்கள் அனைவரையும் போலிசார் குண்டுகட்டாக தூக்கியும் வலுக்கட்டாயமாக இழுத்தும் வெளியேற்றினர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யபட்டனர்.

நொந்து போன விவசாயிகள் ஒரு புறம் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் வண்ணம் அமைச்சர்கள் தொடர்ச்சியாக பேசிக் கொண்டு வருவதற்கு கடும் கண்டம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.