Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 29, 2017

ஜல்லிகட்டை முடக்க மீண்டும் சதி, அம்பலம்!


தமிழக அரசின் சட்டம் மூலம் தற்போது தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டு நடைபெற்று வருகிறது.

இந்த சட்டத்திற்கு எதிராக மத்திய அரசின் கீழ் செயல்படும் விலங்குகள் நல வாரியத்தின் செயற்குழு உறுப்பினரும், அந்த அமைப்பின் சட்டத்துறை தலைவருமான அஞ்சலி சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கும் ஏற்றுக் கொண்டது. அதே நேரம் அந்த அமைப்பின் தற்காலிக தலைவரான எஸ்.எஸ்.நெகி என்பவர் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளலாமா என கேள்வி எழுப்பி இருந்தார்.

ஆனால் இதற்கு எந்த உறுப்பினர்களும் பதில் அளிக்காததால், அவகாசம் நாளை மாலை வரை நீட்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் தன்னிடம் கலந்தாலோசிக்காமல் அஞ்சலி சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள அஞ்சலி சர்மா, விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவரான எஸ்.எஸ்.நெகியிடம் ஆலோசித்த பின்னரே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதனால் மத்திய அரசின் கீழ் செயல்படும் விலங்குகள் நல வாரியத்தில் ஜல்லிகட்டு தொடர்பாக ஒருமித்த கருத்து இல்லாதது அம்பலமாகியுள்ளது. இதனால் ஜல்லிகட்டிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்துவிடலாம் என கூறப்படுகிறது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஜல்லிகட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாது என கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.