Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 22, 2017

மதுரை போராட்டத்தில் பங்கேற்ற சந்திரமோகன் மயங்கி விழுந்து பலி: போராட்ட களத்தில் முதல் சோகம்


ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்று கோரி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் சந்திரமோகன் என்பவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஒருவர் இன்று மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். 5 நாட்களாக எழுச்சியோடு நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் முதல் உயிர் பலியாகியுள்ளது அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது. என்றாலும் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய போராட்டம் தொடர்ந்து 5 நாட்களாக இரவு பகல் பாராமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்த போதிலும், அதனையும் ஏற்காமல் நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று கூறி தமுக்கம் மைதானத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கு மக்களிடையே பெரிய அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. இதனால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் தமுக்கம் மைதானம் சென்று தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவரும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
போராட்டக்களத்தில் முழக்கங்களை எழுப்பியுள்ளார் 48 வயதான சந்திரமோகன். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. தமுக்கம் மைதானத்திலேயே மயங்கி அவர் விழுந்தார். இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்த உயிர் இழப்பு ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இழந்த முதல் உயிர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போராட்டக்களத்தில் இருப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. என்றாலும் போராட்டம் நிற்காமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.