January 4, 2017
ஜெ.,வை முதல்வர் நாற்காலியில் அமர வைத்த நடராஜன்! சொல்லி அடித்த கில்லி!
எம்.ஜி.ஆர் இறந்து சில தினங்களில் ஜெயலலிதா, நடராஜனிடம் சொன்னாராம்… நான் முதல்வராக வேண்டும் என்று.
அதற்கு நடராஜன், “எதையும் எடுத்தோம்… கவிழ்த்தோம் என்று செய்ய முடியாது. ஆட்சியை எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றிக் கொள்ளலாம். முதலில், கட்சியைக் கைப்பற்ற வேண்டும். கட்சி கட்டுக்குள் வந்தால்… ஆட்சியும் வரும் என்றாராம்.
அதே போல ஜானகி அம்மையாரை சந்தித்து பேசியவர் நடராஜன் தான். உங்களுக்கு எதற்கு வீண் சிரமம் ஜெ., ஆக்டிவாக இருப்பார்.
உங்கள் கணவர் உருவாக்கிய கட்சியை காப்பாற்ற வேண்டாமா என்பது போல தொடர்ந்து பேசி ஜானகி அம்மையாரை ஒதுங்கச் செய்தவர் நடராஜன் என்கிறார்கள்.
அதன் பின் ஜெ., எதிர்ப்பாளர்கள் யார் யார் என்று பார்த்து அவர்களை அரவணைத்து ஜெ., பக்கம் திருபியவரும் நடராஜன் தான்.
அதன் பின் மொத்தக் கட்சியும் ஜெ., வசம் வந்தது. அதன் பின் ஜெ.,ஆசைப்பட்ட முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தவர் நடராஜன்.
வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. சசிகலா அவசரப்படவில்லை. முதலில் கட்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.
இப்போது நேரம் கனிந்துவிட்டது. அதே நடராஜன் தனது மனைவியை முதல்வர் ஆகும் பொறுப்பில் இருக்கிறார்.
அவர் நினைத்ததை சாதித்து காட்டுவார் என்பதே நீண்ட அரசியல் களம் கண்டவர்களின் கருத்து.
ஜெ.,வை முதல்வர் நாற்காலியில் அமர வைத்த நடராஜன்! சொல்லி அடித்த கில்லி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 04, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.