Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 9, 2017

பெப்சி, கோக் நிறுவனங்களிடம் இனி ரயில்கள்!



ரயில்களின் முழு விளம்பர உரிமையும் பெப்சி, கோக் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவு பெற்று விட்டன. இந்த திட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போதே முன்மொழியப்பட்டது.
ஆனால் அதனை மன்மோகன் அரசு செயல்படுத்தவில்லை. தற்போது பிரதமர் மோடி இந்த திட்டத்தை விரைவு படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் படி, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களின் முழு விளம்பர உரிமையும் பெப்சி, கோக் நிறுவனங்களிடம் செல்கின்றன.
அவர்கள் தங்களது நிறுவன தயாரிப்புகளை ரயிலின் உள் மற்றும் வெளிப்புறங்களில் விளம்பரம் செய்து கொள்வார்கள்.
ரயில்நிலையங்களிலும் அவர்களே விளம்பரம் செய்து கொள்வார்கள். பிற நிறுவனங்களின் விளம்பரங்களை அனுமதிப்பார்களா என தெரியவில்லை.
இதன்மூலம் ரயில்வே துறைக்கு ஒரு பெரும் தொகை வழங்கப்படும். இதனால் ரயில்வே தனது நிதிச்சுமையை பயணிகள் மீது சுமத்தாமல் அந்த வருவாயை கொண்டு ஈடு செய்து கொள்ளும்.
இது குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தனது சிறு வயது ரயில்நிலைய அனுபவங்களை நினைவு கூர்ந்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.