தமிழர்களின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு பின்னால் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. மாடுகளை வதைப்பதாகவும், மாடுகள் பலியாவதாகவும் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுகள் நிறுத்தப்பட்டால் காளை மாடுகளின் இனம் அழிந்து விடும்.
காளை மாடுகள் அழிந்து விட்டால் பசுக்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும் என்று கருதுகிறார்கள். அவ்வாறு பசுக்களின் எண்ணிக்கை குறையும் போது வெளிநாட்டு ஜெர்சி பசுக்களை இறக்குமதி செய்யலாம் என்றும் திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த ஜெர்சி பசு என்பது அதிக அளவில் பால் சுரக்கும். அதுமட்டுமல்ல பன்றியின் ஜீனை எடுத்து பசுக்களின் சினைப்பையில் செலுத்தி சோதனை செய்யப்பட்டதில் பிறந்ததான் இந்த ஜெர்சி பசுக்கள்.
நாட்டுப்பசுவின் பால் அதிக ஊட்டச்சத்தும், சக்தியும் நிறைந்தது. பிறந்த குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை விரும்பி அருந்தும் பால் எவ்வித நோயையும் ஏற்படுத்துவதில்லை. அதற்கு மாறாக நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து காணப்படுகிறது.
ஆனால் ஜெர்சி பசுக்களின் பாலை அருந்துவதால், உடலில் எல்லாவித நோய்களும் ஏற்படுத்தும் என்றும் அதில் எந்தவித வைட்டமின்களோ, ஊட்டச்சத்தோ கிடையாது என்றும் கூறப்படுகிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.