Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 2, 2017

கார்டனில் கடும் மோதல்..! சசிகலா, இளவரசி குடுமி பிடி சண்டை..!



ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் சசிகலா, தனது குடும்ப உறவுகளின் தலையீடு கட்சியில் இனி இருக்காது என்றும் தெரிவித்திருந்தார்.
பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் சசிகலாவே முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்றும், கட்சியும், ஆட்சியும் ஒருவரே தலைமை ஏற்பதுதான் சிறந்தது என்றும் தம்பிதுரை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்நிலையில் முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் தம்பிதுரை.
கட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் சசிகலா அடுத்ததாக முதல்வர் பொறுப்பையும் ஏற்பார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலாவின் சகோதரரின் மனைவியான இளவரசி பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதா பதவியில் இருக்கும்போது கூடவே இருந்த சசிகலா எந்தவொரு பதவியிலும் அங்கம் வகிக்காததால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். தற்போது தனக்கும் அந்தமாதிரியான சூழ்நிலை ஏற்படாமல் இருக்க கட்சியில் பதவி வழங்குமாறு இளவரசி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இளவரசியின் இந்த கருத்துக்கு அவரது மகனும் ஆதரவு தெரிவித்து சசிகலாவிற்கு நெருக்கடி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், கார்டனில் கடும் மோதல் போக்கு உருவாகியிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.