Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 18, 2017

இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் தான் ஜல்லிக்கட்டு போராட்டம்


இன்றைய இளைஞர்கள் தமிழர்களின் ஒட்டு மொத்த பிரச்சினையாக தான் ஜல்லிக்கட்டை பார்க்கிறார்கள். தமிழகம் முழுவதில் இருந்தும் சென்னை நோக்கி வாருங்கள். செயின்ஜார்ஜ் கோட்டையில் இருப்பவர்களின் காதுகளில் இந்த போராட்டத்தினுடைய குரல் இன்னும் கேட்கவில்லையா? எனவே இன்னமும் கூட தங்களின் குரலை உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காக மிக அதக அளவில் சென்னையை நோக்கி வாருங்கள் என்று சமூக வலைதளங்கள் மூலம் அழைத்து கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தின் எழுச்சியும், வீரியமும் நேற்று காலை எப்படி ஆரம்பித்ததோ அதை காட்டிலும் பல மடங்கு அதிகரித்துள்ளதே தவிர நேரம் செல்ல செல்ல இதனுடைய வீரியம் குறைந்ததாக தெரியவில்லை.

இன்றைக்கும் கூட இந்த போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக மாறுவதற்கான சூழ்நிலை தான் உதித்திருக்கிறது. மெரினா கடற்கரை இளைஞர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரும் தங்களது கோஷங்களை எழுப்புகிற போது கோபத்தையும், கொந்தளிப்பையும், தங்களின் உணர்ச்சிகளையும் பதிவு செய்கின்றனர். இந்த நாட்டின் கைக்கூலியாக செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகள் துணை போகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பீட்டா அமைப்பின் மீது கடுமையான விமர்சனங்களை அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை இதுவரை எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் இருக்கிறார் என்று அவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். ஏதோ பொங்கல் முடிந்ததும், மாட்டு பொங்கல் முடிந்ததும் ஜல்லிக்கட்டு விவகாரத்தை தூக்கி பரனில் போட்டு விடுவார்கள் என்றும், தமிழ்நாட்டு மக்கள் இதை மறந்து விடுவார்கள் என்ற நினைப்பு பல பேருக்கு இருந்திருக்கலாம். ஆனால் அந்த நினைப்பை எல்லாம் உடைத்தெரிய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏதோ ஆண்டு தோறும் பொங்கல் நேரத்தில் மட்டுமே இப்பிரச்சினையை கையில் எடுத்து போராட்டம் நடத்துவது அதற்கு பின்பு கலைந்து சென்று இயல்பான வாழ்க்கையில் ஈடுபடுவது மட்டுமல்ல இளைஞர்களின் நோக்கம்.

அதை தாண்டி எந்த அரசியலும், லாப நோக்கம் இல்லாமல் தமிழ்நாட்டின் பண்பாட்டு, கலாச்சாரம், பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பது எங்களின் கடமை. சமூக வலைதளங்கள் வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் பயன்படுத்தாமல் தமிழகத்தின் பழுதை நீக்கவும் ஆயுதமாக கையில் எடுத்திருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளதை இந்த போராட்டம் மூலம் பார்க்க முடிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.