Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 21, 2017

ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவு: பதக்கத்தை திருப்பி கொடுத்த தங்க தமிழன் மாரியப்பன்!


ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவாக பாரா ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை திருப்பிக் கொடுப்பதாக அறிவித்துள்ளார் சேலம் மாரியப்பன்.

ஜல்லிக்கட்டு புரட்சியில் தம்மை இணைத்துக் கொள்ளும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக்கில் தாம் வென்ற தங்கப் பதக்கத்தை திருப்பி கொடுப்பதாக அறிவித்துள்ளார் மாரியப்பன்.
உலகை உலுக்கிய வரலாற்றுப் புரட்சிகளில் தமிழகத்து மாணவர்கள், இளைஞர்களின் அறவழி போரும் இடம்பிடித்துவிட்டது.

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரவே முடியாது என ஏமாற்றிய அரசாங்கங்களை அடிபணிய வைத்திருக்கிறது இளைஞர் பட்டாளம்.

வீட்டு பிள்ளைகள் போர்க்களத்தில் நிற்க குடும்பம் குடும்பமாக பெரியவர்களும் அணி திரண்டு ஆதரவு தர ஒட்டுமொத்தமாக தமிழகமே போர்க்களமாக காட்சி தருகிறது. யுத்தமும் ரத்தம் சிந்தாமலும் சரித்திரம் படைக்கிறது தமிழர் படை.


இந்த புரட்சி ஜோதியில் குடும்பம் குடும்பமாக இணைத்துக் கொள்ளும் காட்சிகள் ஒவ்வொரு நகரத்திலும் காண முடிகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவாக மாற்றுத் திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தம்முடைய பதக்கத்தை திருப்பித் தருவதாக அறிவித்து நெகிழ வைத்திருக்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.