January 18, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தடியடியால் பழைய மாமல்லபுரம் சாலை போர்க்களமானது. சென்னை சோழிங்கநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தினர். தடியடி நடத்தியதால் கலைந்த மாணவர்கள் மீண்டும் ஒன்று கூடி போராட திட்டமிட்டுள்ளனர். அமைதியான முறையில் போராடும் தங்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதாக மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் வெடித்துள்ளது.
இந்த போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். சென்னை மெரினாவில் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மதுரை தமுக்கம், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, கோவை வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட இங்களில் விடிய, விடிய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி
Reviewed by மறத்தமிழன்
on
January 18, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.