
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் பெற்றோரை கட்டிப்போட்டு மகன் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரியகுளம் கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியில் வசித்து வரும் மணிகட்டி-ஈஸ்வரி தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் கடைசி மகனான கார்த்திக் ராஜா, வேலையின்றி ஊர் சுற்றி வந்ததுடன், பெற்றோரிடம் குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
மகனின் பொறுப்பற்ற செயலால் மணிகட்டி-ஈஸ்வரி தம்பதியினர் வேதனையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது பெற்றோரிடம், குடிக்க பணம் கேட்டு கார்த்திக் ராஜா மீண்டும் தகராறு செய்துள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரத்தில் தந்தை மணிகட்டி மற்றும் தாய் ஈஸ்வரியின் கை, கால்களை கட்டிப் போட்ட கார்த்திக் ராஜா, அவர்களை கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
மகனின் ஈவு, இரக்கமற்ற செயலால் அதிர்ந்த பெற்றோர் கூச்சலிட்டதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து சென்று இருவரையும் மீட்டனர். குடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் பெற்றோரை கட்டிப்போட்டு மகனே கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.