Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 29, 2017

இளைஞர்களை பயங்கரவாதிகளாக காங்கிரஸ் சித்தரித்தது: பிரதமர் மோடி


சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு சில தினங்களே உள்ள நிலையில் பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது. பஞ்சாப்பில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
கொட்காபுராவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். இளைஞர்களை பயங்கரவாதிகளாக காங்கிரஸ் சித்தரித்தது. மற்றவர்கள் சிலர் இளைஞர்களை போதை மருந்துக்கு அடிமையானவர்களை சித்தரித்தது என்று பிரதமர் கூறியுள்ளார். இதனை எப்படி ஏற்று கொள்ள முடியும். பாதல் பஞ்சாப் நலனுக்கும், விவசாயிகள் மற்றும் மக்கள் நலனுக்கும் செலவு செய்தார் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

முதல்வர் பாதல் குறித்து சிலர் தவறாக பேசுவதை ஏற்க முடியாது. பஞ்சாப் பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இதனால், மாநில பாதுகாப்பை உறுதி செய்யும் அரசையே மக்கள் விரும்புகின்றனர். இதேபோன்று பாஜகவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சி சார்பில் முதலமைச்சர் பிரகாஷ்சிங் பாதல் லம்பியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவா மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சை ராவத், கோவாவில் செல்வாக்கு பெற்ற கட்சியாக பாரதிய ஜனதா இருந்தும் மாநில முன்னேற்றத்திற்கு இதுவும் செய்யாமல் அவமதித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே கோவாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 21-ம் தேதி கோவாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கெஜ்ரிவால் அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தால் வாக்காளர்கள் வாங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.